விடியல்

Wednesday, April 05, 2006

நபிவழியின் பரினாம வளர்ச்சி.....?

தமிழக அரசியல் அரங்கில் சூடு தொடங்கிவிட்டது. வழக்கம் போலவே முஸ்லிம்கள் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொருவரும் எதிர் அணியினரை தாக்கத் தொடங்கிவிட்டனர். கருத்து மோதல்களாக அல்லாமல் தனிநபர் தாக்குதல்களாக இது தொடர்கிறது.

ஒவ்வொரு அணியினரும் தங்கள் தரப்பு வாதத்தை நியாயப்படுத்துவதற்காக எதிர்தரப்பு கட்சிகளின் அநீதத்தை பெரிதுபடுத்தியும், தம்தரப்பு கட்சிகளின் அநீதங்களை மறந்தும் செயல்படுகின்றனர்.

இன்று தமிழ்.நெட் இணைய தளத்தில் உலா வந்தபோது முகவைதமிழன் என்ற த.த.ஜ. தொண்டரின் பக்கத்திற்கான தொடுப்பு கிடைத்து சென்று பார்த்தேன். வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமகம் அளவுக்கு எங்களாலும் பேச - எழுத முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்தது. அவர் கூறுகிறார்:

ஜெயலலிதாவிடம் உறவு வைப்பதும் என் தாயிடம் உடலுரவு கொள்வதும் ஒன்று என்று கூறி அடுத்த தேர்தலிலேயே கூட்டனி வைத்த ராமதாசின் தாயுடன் உடலுரவு வைத்த ராமதாசின் நடவடிக்கைக்கும் த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லாவின் நடவடிக்கைக்கும் ஏதேனும் மாற்றம் உன்டா ???

தாயுடன் உடலுரவு வைத்தது யார் ??? முஸ்லிம் உம்மாவை சுயநலத்திற்காக கருனாநிதியிடம் அடகு வைத்து கூட்டி கொடத்தது யார் ??

தாயுடன் உடலுறவு வைத்தவர் என்று ஜவாஹிருல்லாஹ்வை அவர் குற்றம் சுமத்துகிறார். முஸ்லிம் சமுதாயத்தை கூட்டிக் கொடுத்தவர் என்று குற்றம் சுமத்துகிறார். கூட்டிக்கொடுத்தவர் என்பது விபச்சாரத்திற்கு கூட்டிக்கொடுப்போரையை குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது.

இன்னொமொரு பதிவில்,

இதுக்கு மேலயும் இவுங்க மூஞ்சில செருப்பு, வெலக்கமாற வீசாம இருந்தால் இந்த சமுதாயம் மாதிரி ஒரு இழிச்சாவாயி சமுதாயம் வேற இல்லை.. காலையில ஃபஜ்ர் தொழுதவுடன் நம்ம தவ்ஹீத் ஜமாஅத் தலைவர போயி சந்திப்போம்.. இவங்கனால நாம அவுங்கல ரொம்பத்தான் பகைச்சிக்கிட்டோம்.

மூச்சுக்கு முன்னூறு முறை நபிவழி, நபிவழி என்று கூறினோமே இப்பொழுது எங்கே போய்விட்டது அந்த நபிவழி? கருத்து வேறுபாடு ஏற்பட சாத்தியமுள்ள கடமை அல்லாத உபரி வணக்கங்களில்கூட நபிவழியைத்தான் பின்பற்றுவோம் என்று கூறி தாய் தந்தை மற்றும் உறவினருடன் பகை கொண்டடோம். நபிவழியைப் பின்பற்றவேண்டும் என்பதற்காக போட்டிருந்த தொப்பியை கழற்றி வீசினோமே! அந்த நபிவழி இப்போது எங்கே?

இது நபிவழியின் பரிணாம வளர்ச்சி என்று ததஜவினர் கூறமுற்படுவார்களானால் இத்தகையோர் நபிவழிப்படி நடப்பதாக கூறிக்கொண்டு ஊரை ஏமாற்றும் ஏமாற்றுப் பேர்வழிகள் என்பதை நாம் உணரவேண்டும்..

அல்லாஹ்வுக்கு பயந்து கொள்வோமாக!

16 Comments:

  • At 11:51 PM, Anonymous Anonymous said…

    nice post we have to think abt it

    dont u see muthupettai.com as well as tmmk vs pj.com

    i will appriciate if u be a neutral person

    -vision

     
  • At 12:49 AM, Blogger இப்னு அலிய் said…

    அனானி அவர்களே...

    நீங்கள் குறிப்பிட்ட இரு தளங்களையும் பார்வையிடக்கூடியவன்தான் என்றாலும், தாயுடன் உறவு கொண்டவர் என்ற அளவுக்கு மிக கேவலமான முறையில் விமர்சனம் செய்யப்படவில்லை என்றே நினைக்கிறேன். வெளக்கமாறால் மற்றும் செருப்பால் அடிக்க வேண்டும் என்பன போன்றவற்றையும் அவற்றில் கண்டதாக எனக்கு நினைவு இல்லை.

     
  • At 1:06 AM, Anonymous Anonymous said…

    முகவைதமிழன் n others ... are nt a authority person of tntj ...

    muthupettai.com,tmmk vs pj.com n these guys muhaivai tamizan those people r making nonsence

    "avvan uddal muluvathum asingathai pusikondullan athanal naan kaali meethipathil thavaru enna enbathu pol irrukirathu ungaludaiya intha pathivu"

    hope your reply will be a solution for this nonsence

     
  • At 1:23 AM, Anonymous Anonymous said…

    முகவைத்தமிழனின் அநாகரீகமான கீழ்காணும் விமர்சனத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

    அவரது விமர்சனத்தை அவரது வலைதளத்திலேயே நான் கண்டேன்.

    ஜெயலலிதாவிடம் உறவு வைப்பதும் என் தாயிடம் உடலுரவு கொள்வதும் ஒன்று என்று கூறி அடுத்த தேர்தலிலேயே கூட்டனி வைத்த ராமதாசின் தாயுடன் உடலுரவு வைத்த ராமதாசின் நடவடிக்கைக்கும் தஇமு.மு.க தலைவர் ஜவாஹிருல்லாவின் நடவடிக்கைக்கும் ஏதேனும் மாற்றம் உன்டா ???

    தாயுடன் உடலுரவு வைத்தது யார் ??? முஸ்லிம் உம்மாவை சுயநலத்திற்காக கருனாநிதியிடம் அடகு வைத்து கூட்டி கொடத்தது யார் ??

    நீங்கள் உண்மையான ததஜ அணியைச் சேர்ந்தவராக இருந்தால் நாகரீகமான விமர்சனம் செய்வது தான் உங்கள் இம்மை, மறுமையை வாழ்விற்கு உகந்ததாகும். இல்லையேல் தோழ்வியே மிஞ்சும் . எச்சரிக்கை.

    இறை விசுவாசி 06.04.2006

     
  • At 1:46 AM, Anonymous Anonymous said…

    சகோதரரர் விடியல் அவர்களுக்கு,

    தங்களின் விமர்சனத்தின் இறுதியில் ததஜவினரின் அநாகரீகமான செயல்பாடுகளை விமர்சனம் செய்து விட்டு கீழ்காணும் விமர்சனத்தை இணைத்துள்ளீர்கள். இதில் 'இத்தகைய நபிவழி நமக்குத்தேவை இல்லை' என்பது மிகவும் பாரதூரமான விமர்சனம் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

    இது நபிவழியின் பரினாம வளர்ச்சி என்று த.த.ஜ.வினர் கூறமுற்படுவார்களானால் இத்தகைய நபிவழி நமக்குத்தேவை இல்லை.

    தயவு செய்து, கீழ்கண்டவாறு உங்களின் விமர்சனத்தை மாற்றிப் பதிவுசெய்யுங்கள் ப்ளீஸ்.

    'இது நபிவழியின் பரிணாம வளர்ச்சி என்று ததஜவினர் கூறமுற்படுவார்களானால் இத்தகையோர் நபிவழிப்படி நடப்பதாக கூறிக்கொண்டு ஊரை ஏமாற்றும் ஏமாற்றுப் பேர்வழிகள்'.

    குர்ஆனும் நபிவழியும் நமது வெற்றிக்கு என்றும் தேவை. நபிவழி ததஜவினருக்கு மட்டும் சொந்தமன்று, அது எல்லோருக்கும் பொதுவானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    அல்லாஹ் நம்மை இறைமறை மற்றும் தூதர்மொழிப்படி நடப்பவர்களாக ஆக்கி அருள்புரிவானாக.

    இறை நேசன் 06.04.2006

     
  • At 2:22 AM, Blogger இப்னு அலிய் said…

    சகோ. இறைநேசன் அவர்களுக்கு தங்கள் ஆலோசனையை ஏற்று அதன்படி பதிவில் மாற்றம் செய்துவிட்டேன். தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!

     
  • At 3:13 AM, Blogger இப்னு அலிய் said…

    சகோ. அனானி,

    முகவைதமிழன் த.த.ஜ.வின் அதிகாரபூர்வ உறுப்பினர் என்று நான் கூறவில்லை. ஆனால் அவர் த.த.ஜ. தொண்டர் என்பது இதற்கு முந்தைய அவரின் பதிவிலிருந்து தெரிகிறது. அவரின் தளமும் த.த.ஜ.வின் அதிகாரபூர்வ தளமன்று. இதுபோன்றே மற்ற இரு தளங்களும்.

    ''அவன் உடல் முழுவதும் அசிங்கத்தைப்பூசிக் கொண்டுள்ளான். அதனால் நான் காலில் மிதிப்பது தவறு என்ன என்பது போல் உங்களுடைய இந்த பதிவு இருக்கிறது'' என்று கூறியுள்ளீர்கள்.

    நான் அந்த அசிங்கத்தை காலில் மிதிக்கவில்லை. அதே சமயம் அது அசிங்மானது என்பதை அவருக்கும் மற்றவர்களுக்கும் சுட்டிக்காட்டியுள்ளேன். அவ்வவுதான்.

    நான் பதிலளிப்பதால் இந்த முட்டாள்தனத்திற்கு தீர்வு கிடைத்துவிடும் என்றெல்லாம் கூறவில்லை. இத்தகைய முட்டடாள் தனத்தை செய்பவர்களையும் செய்பவர்களை ஊக்குவிப்பவர்களையும் நாம் புறக்கணித்ததால் இன்ஷா அல்லாஹ் தீர்வு கிடைக்கும்.

     
  • At 12:01 AM, Blogger அப்துல் குத்தூஸ் said…

    அன்புள்ள விடியல்,

    யாரோ ஒருவர் ததஜ வின் முகமூடி அணிந்துக் கொண்டு அந்த இயக்கத்திற்கு களங்கம் ஏற்படுத்த நினைக்கின்றார். அதை உண்மைப்படுத்தும் முகமாக நீங்கள் அவருக்கு துணை நிற்காதீர்கள். அவர் ததஜ வின் தொண்டர் என்பதை எந்த ஆதாரத்தைக் கொண்டு எழுதுகின்றீர்கள்? அல்லாஹ்விற்கு பயந்துக் கொள்ளுங்கள்.

    ஒரு இயக்கத்தைக் குறைக் கூறுவதாக இருந்தால் அந்த இயக்கத்தின் அதிகாரப்பூர்வமான செய்திகளைக் கொண்டு உங்களின் விமர்சனத்தை கூறுவது அறிவுடமை ஆகும்.

     
  • At 12:32 AM, Blogger இப்னு அலிய் said…

    அன்பின் அப்துல் குத்தூஸ்,

    நான் த.த.ஜ. என்ற இயக்கத்தை குறை சொல்லவில்லை. த.த.ஜ. இயக்கத்தின் தொண்டரைத்தான் குறை சொல்லியுள்ளேன். மீண்டும் ஒரு முறை படிக்கவும்.

    //அவர் த.த.ஜ.வின் தொண்டர் என்பதை எந்த ஆதாரத்தைக் கொண்டு எழுதுகின்றீர்கள்?//

    இதேபோன்று நானும் "எந்த ஆதாரத்தைக் கொண்டு அவர் த.த.ஜ.வைச் சார்ந்தவர் அல்லர் என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்" எனக் கேட்கமுடியும்.

    அவர் த.த.ஜ.வின் தொண்டர் என்ற என் அனுமானத்திற்கு அவரது முந்தைய பதிவு ஆதாரமாக உள்ளது.

    இயக்கத்தின் மேல் உள்ள பாசம் நம்மைச் சிந்திக்காதிருக்கச் செய்ய வேண்டாம். அல்லாஹ் போதுமானவன்.

     
  • At 7:08 AM, Blogger அப்துல் குத்தூஸ் said…

    விடியலாரே...

    //*
    இது நபிவழியின் பரிணாம வளர்ச்சி என்று ததஜவினர் கூறமுற்படுவார்களானால் இத்தகையோர் நபிவழிப்படி நடப்பதாக கூறிக்கொண்டு ஊரை ஏமாற்றும் ஏமாற்றுப் பேர்வழிகள் என்பதை நாம் உணரவேண்டும்.. *//

    ஒருவரைப்பற்றி எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல், அவர் ததஜ வை பரிந்துரைத்து பேசுவதை மட்டும் வைத்துக் கொண்டு அவர் ததஜ வின் தொண்டராகவும், அவருக்கு அறிவுரைக் கூறுவதாக நினைத்துக் கொண்டு ததஜவிற்கே அறிவுரை வழங்குகின்றீர்களே? இது தான் உங்களின் நியாய போக்கா?

    //* இதேபோன்று நானும் "எந்த ஆதாரத்தைக் கொண்டு அவர் த.த.ஜ.வைச் சார்ந்தவர் அல்லர் என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்" எனக் கேட்கமுடியும். *//

    இது உங்களுக்கே நியாயமாக உள்ளதா? எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் ஒருவரை ததஜவின் தொண்டனாகவும், அதேப்போன்றே அந்த இயக்கத்தில் உள்ளவர்களும் ஆவார்கள் எனப் பொருள் பட விமர்சனம் செய்கின்றீர்கள். இதை எவ்வாறு நம்புவது எனக் கேட்டால் அதை நீங்கள் தான் நிரூபிக்க வேண்டும் என்பது எந்த ஊர் நியாயங்க?

    //* இயக்கத்தின் மேல் உள்ள பாசம் நம்மைச் சிந்திக்காதிருக்கச் செய்ய வேண்டாம். அல்லாஹ் போதுமானவன். *//

    இது உங்களுக்கு நீங்களேக் கூறிக்கொள்கின்றீர்களா? அல்லது எனக்கா? என்னைக் குறிப்பிடுவதென்றால் நீங்கள் மறுமுறையும் தவறு செய்கின்றீர்கள். ஏனென்றால் நான் எந்த இயக்கத்தையும் சாராதவன்.

    உங்கள் கருத்தை பொதுவாக எடுத்துவைய்யுங்கள் என்றுதான் கூறுகின்றேன். ஆதாரம் இல்லாமல் கூறப்படும் எதுவும் இட்டுக்கட்டுக்காண பாவத்திற்கு ஆளாக நேரிடும். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.

     
  • At 9:12 AM, Blogger இப்னு அலிய் said…

    This comment has been removed by a blog administrator.

     
  • At 9:20 AM, Blogger இப்னு அலிய் said…

    த.த.ஜ.வுக்கு பரிந்துரை செய்வது மட்டுமின்றி அதன் எதிர் அணியாக உள்ள த.மு.மு.க.வின் தலைவரை தரக்குறைவாக விமர்சிக்கும் ஒருவர் த.த.ஜ. தொண்டராக இல்லாமல் த.மு.மு.க. தொண்டர் என கூறுகிறீர்களா? நீங்கள் சொல்வது ஒன்றும் புரியவில்லை. (தொண்டர் எனக்குறிப்பிடக் காரணம் வெற்றி கொண்டானை போன்று விமர்சித்தாலேயே. இல்லையென்றால் த.த.ஜ. வினர் என்றே குறிப்பிட்டிருப்பேன்.)

    //ததஜவிற்கே அறிவுரை வழங்குகின்றீர்களே? இது தான் உங்களின் நியாய போக்கா?//

    த.த.ஜ.விற்கு நான் அறிவுரை எதுவும் சொல்லவில்லையே. இத்தகையவர்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள் என்றுதான் கூறியுள்ளேன்.

    தயவுசெய்து த.த.ஜ. விமர்சனத்திற்கோ அல்லது அறிவுரை சொல்லப்படுவதற்கோ அப்பாற்பட்டது என்று எண்ணிவிடாதீர்கள். த.த.ஜ.வின் தலைவரும் அதன் தொண்டர்களும் நம்மைப்போன்ற மனிதர்களே. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களல்ல.

    நான் த.த.ஜ.வையே விமர்சித்ததாக வைத்துக் கொண்டாலும் தரம் தாழ்ந்து விமர்சித்துவிடவில்லை. இதற்காக இவ்வளவு தூரம் வாதிடும் தாங்கள் அந்த சகோதரரின் இழி செயலை ஒரு வார்த்தை கூட கண்டிக்கவில்லையே. விமர்சிக்கப்படுவது த.த.ஜ. தலைவர் அல்ல, த.மு.மு.க.வின் தலைவர் என்பதாலா? அவரும் முஸ்லிம்தானே...!

    மீண்டும் ஒரு முறை சுய அறிமுகம்:

    சமுதாயத்தை முன்னர் குறை கூறப்பட்ட இரு இயக்கங்களைவிட அதிகமாக கூறுபோட்டு சந்தி சிரிக்க வைத்த பெருமைக்குரிய இரு முன்னணி பேரியக்கம் எதிலும் நான் உறுப்பினர் இல்லை. அதுபோன்றே விடியல் வெள்ளியின் மனிதநீதிப் பாசறையிலும் உறுப்பினர் இல்லை. வேறு என்னென்ன கழகங்கள், லீகுகள் உள்ளனவோ அவற்றில் எதிலும் நான் உறுப்பினர் இல்லை. (சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் லீகில் உறுப்பினராக விண்ணப்பித்திருந்தேன். நல்லவேளையாக இதுவரை உறுப்பினர் அட்டை வந்து சேரவில்லை).

     
  • At 2:12 AM, Blogger முகவைத்தமிழன் said…

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    அன்புள்ள இனைய சகோதரர்களே ,

    இந்த வலை 'வுயுஆஐடுஆருளுடுஐஆ Pழுடுஐவுஐஊளு' துவங்கபட்டதன் அவசியம் தமிழ் முஸ்லிம்கள் தங்களின் அரசியல் நிலை பற்றி விவாதிப்பதற்கே ஆகும்.

    இங்கு யார் வேன்டுமானாலும் தமிழக முஸ்லிம்களின் அரசியல் நிலை மற்றும் இந்திய அரசியலில் தமிழ் முஸ்லிம்களின் நிலை பற்றி அலசலாம்.

    இங்கு அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம். ஒருவர் மீது சுமத்தபடும் குற்றசாட்டுக்களுக்கு மற்றவர் பதில் அளிக்களாம்.

    அனைத்து இயக்கங்களின் கருத்துக்களும் இங்கு வரவேற்கப்படுகின்றன !! இதன்மூலம் தமிழ் முஸ்லிம்கள் இன்று தங்களின் வாழ்வையும் , அரசியல் நிலைத்தன்மையையும் முன்னேற்றுகின்றேன் என்று கங்கனம் கட்டி கொன்டிருக்கும் கழகங்களை பற்றியும் ஜமாத்துகளை பற்றியும் தெளிவாக அறிய இயலும்.

    இன்றுவரை துவங்கப்பட்டுள்ள அனைத்து வலைமனைகளும் இஸ்லாத்தை பற்றி விவாதிக்கின்றனவே தவிர தமிழ் முஸ்லிம்களின் மணநிலையையும் தாங்கள் சார்ந்துள்ள அரசியல் பற்றிய அவர்களின் கருத்துக்களையும் மறைவுகள் இன்றி விவாதிக்க தயாரில்லை.

    இங்கு நான் அனைத்து இயக்கங்களின் ஆதரவாளர்களையும் , இயக்கங்களையும் தங்கள் சார்பு கருத்துக்களை பதிவு செய்யவும் அது குறித்து விவாதிக்கவும் அழைக்கின்றேன். அதுபோல் இது குறித்து விமர்சிப்பதற்கு அருளடியான் , குஞ்சாலி மறைக்காயர் போன்றவர்களையும் அழைக்கின்றேன்.

    'விடியல்வெள்ளி' என்ற வலையில் சகோதரர்ஒருவர் இந்த வலை பற்றி பதிந்த கருத்துக்களுக்கும் இங்கு பதில் சொல்ல கடமைபட்டுள்ளேன். இந்த விடியல்வெள்ளி' என்ற சகோதரரின் பதிவு இன்று சில இயக்கத்தினராலும் மற்றும் இயக்கம் சாராதவர்களாளலும் விமர்சிக்கபடுகின்றது.

    இந்த 'வுயுஆஐடுஆருளுடுஐஆ Pழுடுஐவுஐஊளு' ல் பதியப்பட்டுள்ளவை எனது சுய வார்த்தைகளோ எழுத்துக்களோ அல்ல இவை எனக்கு மின்ஞ்சல் மூலம் கிடைக்கப்ப்டவை. அவற்றை சோதனைபதிவிற்காகா வேன்டி இங்கு பதிவு செய்தேன் . நன்பர் 'விடியல்வெள்ளி' பிரச்சாரம் செய்வது போல் நான் த.த.ஜவின் அடிமட்ட தொன்டனோ அல்லது ஆதரவாளனோ கிடையாது. த.த.ஜ வினரைபற்றிய கடுமையான எனது விமர்சன கட்டுறைகளை எத்தனையோ இனையகுழுமங்கள் பிரசுரம் செய்துள்ளன அப்போதெல்லாம் த.த.ஜ வினர் என்னை த.மு.மு.க வின் கண்மணி என்று குற்றம் கூறவில்லை.
    விவாதிக்கபட்ட இனைய முகவரிகள் :
    hவவி:ஃஃஅரவாரிநவவயi.டிடழபளிழவ.உழஅஃ2006ஃ04ஃடிடழப-pழளவ_06.hவஅட
    hவவி:ஃஃவயஅடை.நெவஃ
    hவவி:ஃஃஎனைலையடஎநடடi.டிடழபளிழவ.உழஅஃ

    இதை சகோதரர்கள் புறிந்து கொள்வார்கள் என்று நம்புகின்றேன். அனைத்து தமிழ் முஸ்லிம் இயக்கங்களையும் இங்கு தங்களது கருத்துக்களையும் , விமர்சனங்களையும், எதிர்ப்புக்களையும் பதிவு செய்ய அழைக்கின்றேன்.

    தலைப்புக்களின் அடிப்படையில் விவாதிப்பது ஆரோக்கியமானது என்பதால் தற்போதைய விவாத தலைப்பாக அடியில்கானும் தலைப்பை நான் இங்கு சிபாரிசு செய்து தங்களை விவாதிக்க அழைக்கின்றேன்.

    தமிழக முஸ்லிம்களாள் மிகவும் வெறுக்கப்படுவது :

    1. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகமா ?
    2. தமிழ்நாடு தவஹித் ஜமாத்தா ?
    3. முஸ்லிம் லீக்குகளா ???

    தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய அழைக்கின்றேன்.

    நன்றியுடன்

    முகவைத்தமிழன்

    குறிப்பு : அப்துல் ரவூப் , உண்மையை உரத்து கூறும் உமர் , இளையவன் , விடியல்வெள்ளி , குஞ்சாளி மறை;காகயர் , அருளடியான் , தமிழ் முஸ்லிம் , கடல் கடந்த த.மு.மு.க , முத்துபெட்டை பிலாக் ஆகிய அனைவரையும் இங்கு தங்கள் கருத்துக்களை விவாதிக்க அழைக்கின்றேன். அவரவர் இனையங்கள் தங்கள் சுயகருத்துக்களை எழுதுவதைவிட ஓரே வலையில் இருவரும் தங்களின் கருத்துக்களை விவாதிப்பது எவ்வளவோ வழிகளிள் நல்லது . பலவேறுபட்ட இயக்கங்களின் கருத்துக்களையும் விவாதம் , எதிர்விவாதங்களையும் தமிழ் முஸ்லிம்கள் ஓரே இடத்தில் அறிந்து கொள்ள இயலும்.

    http://tmpolitics.blogspot.com/

     
  • At 3:29 AM, Blogger இப்னு அலிய் said…

    வஅலைக்குமுஸ்ஸலாம் சகோதரரே!

    நான் வலையுலகிற்கு புதியவன். உங்களுடைய இதற்கு முந்தைய விவாதங்கள் குறித்து ஏதும் அறியாதவன். பிரச்சனைக்குரிய அந்த பதிவுகள் இரண்டும் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டது என்கிறீர்கள். இது குறித்து எதுவும் அந்த பதிவில் குறிப்பிடவில்லை. இந்நிலையில் புதிததாக வாசிக்கும் எவருமே அதனை எழுதியவர் த.த.ஜ.வைச் சார்ந்தவர் என்றே விளங்குவர். (அடுத்தடுத்து இரு பதிவுகள் த.மு.மு.க.வை மட்டுமே தாக்கி எழுதியதால்)

    நீங்கள் மின்னஞ்சலலில் வந்ததை மட்டுமே பதிந்துள்ளீர்கள் என்ற வாதம் உண்மையாக இருக்கும் பட்சத்திலும் இதனை எழுதியவர் த.த.ஜ.வைச் சார்ந்தவராகவே இருக்கக் கூடும்.

    விமர்சனம் என்பது கருத்துக்களை விமர்சனம் செய்வது என்பதாகத்தான் இருக்க வேண்டும். தனி நபர் விமர்சனம் அவசியம் என்று கருதும்போது, அல்லாஹ் விதித்துள்ள வரம்புகளை கணக்கில் கொண்டே விமர்சிக்க வேண்டும். கூட்டிக் கொடுத்தல் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதும், வெளக்கமாறு மற்றும் செருப்பு வீசி அவர்களைத் தாக்க வேண்டும் என்று சொல்வதும் நிச்சயமாக வரம்பு மீறிய வார்த்தைகளே. அது நீங்கள் சுயமாக எழுதியிருந்தாலும் அல்லது மற்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தாலும்.

    தமிழக முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாட்டை விவாதிப்பது அல்லாஹ்வின் நன்மையை நாடி என்பதாக இருந்தால், அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் காட்டிய வழிப்படியே விவாதிக்க வேண்டும். இல்லையெனில் அது நமக்கு நன்மை பயப்பதற்கு மாற்றாக அல்லாஹ்விடம் தண்டனையை பெற்றுத்தந்துவிடும்.

    தொடர்ந்து எழுதுங்கள். நிதானமாக, நேர்மையாக.

     
  • At 3:46 AM, Blogger முகவைத்தமிழன் said…

    Assalamu Alaikum,
    Thank you for publishing my comments and the particular article you are mentioning is till on the net and it was written and published by a TNTJ supporter/member I have copied thi sarticle from www.muthupettai.com .

     
  • At 3:41 AM, Anonymous Anonymous said…

    ANbarhale adithukkollatheerhal otrumaiudan irukka katrukkollungal Allah namakku thunai iruppan

    Anbudan
    Samuthaya Nalam Virumbi

    Note: Please let me know how to write Tamil i dont know how to write Unicode pls help anyone thisregards

     

Post a Comment

<< Home